கவினுக்கு காலை வாரிய கிஸ்: இரண்டே நாளில் இவ்வளவு தான் வசூலா?

Published : Sep 21, 2025, 01:09 PM IST

Kavin Kiss Movie Box Office Collection Day 2 Report : கவின் நடிப்பில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆன, 'கிஸ்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
15
கிஸ் திரைப்படம்:

தேசிய விருது வென்ற, நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான், 'கிஸ்'. இந்த படத்தில், சென்சேஷனல் இளம் ஹீரோவாக அறியப்படும் கவின் ஹீரோவாக நடிக்க, 'அயோத்தி' திரைப்படம் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது .

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

25
கிஸ் கதை சுருக்கம்:

'கிஸ்' படத்தின் கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதியது என்றே சொல்லலாம். ஒரு புத்தகத்தின் மூலம் காதலர்கள் முத்தம் பரிமாறிக்கொள்வதால், கவினுக்கு எதிர்காலத்தை பற்றி அறியும் சக்தியைப் கிடைக்கிறது. காதலை வெறுக்கும் கவின், தனக்கு கிடைக்கும் சக்தியை வைத்து காதலர்களை பிரிக்கிறார். ஆனால், ப்ரீத்தியை சந்தித்த பின் கவின் காதல் வயப்படும் நிலையில்... அதற்க்கு பின் என்ன நடக்கிறது என்பதே இந்த படத்தின் கதைக்களம்.

தனுஷின் குபேரா முதல் புஷ்பா 2 வரை ஆஸ்கர் ரேஸில் குதித்த படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

35
வெற்றியா? தோல்வியா?

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'கிஸ்' திரைப்படம் முதல் நாளே சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற துவங்கியது. கவின் - ப்ரீத்தியின் நடிப்பு, ஜென் மார்ட்டின் இசை, காமெடி காட்சிகள், மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு பாராட்டை பெற்றாலும், இந்த படத்தை கொண்டு சென்ற விதம், கிளைமாக்ஸ் , போன்றவை சரியாம அமையாததே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

இட்லி சுட பொறந்த மாதிரியே.. ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆனதா இட்லி கடை டிரெய்லர்?

45
ரசிகர்களை ஏமாற்றிய கிஸ்:

கவின் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'ஸ்டார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதை தொடர்ந்து நெல்சன் தயாரிப்பில் வெளியான 'பிளாடி பெக்கர்' தோல்வியை சந்தித்தது. எனவே 'கிஸ்' கவுனுக்கு சிறந்த காம்பேக் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது நிறைவேறாமல் போய் உள்ளது.

55
கிஸ் இரண்டாவது நாள் வசூல்:

முதல் நாளில் 'கிஸ்' திரைப்படம் வெறும் ரூ.80 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. இதை தொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதால்... விமர்சனங்களை கடந்து வசூல் செய்யும் என நம்பப்பட்டது. அதன்படி 'கிஸ்' திரைப்படம் இரண்டாவது நாளில்... ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இது கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் மற்றும் பிளாடி பெக்கர் ஆகிய படங்கள் வசூலுடன் ஒப்பிட்டால் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories