முத்துவை மட்டம் தட்டி பேசிய அருண்... டென்ஷனாகி செம நோஸ்கட் கொடுத்த மீனா..! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Sep 24, 2025, 09:31 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை சந்தித்து பேசும் அருண், அவரின் புது பிசினஸிற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, முத்துவின் தொழில் பற்றி இழிவாக பேசுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா பூக்களை அலங்காரம் செய்து கொடுக்கப்படும் பொக்கேவுக்கு பதிலாக, பழங்களை வைத்து பொக்கே தயார் செய்து அதை ஒரு பிசினஸாக செய்ய உள்ளதாக சொல்கிறார். மீனாவின் பொக்கேவை போட்டோ எடுத்து ஸ்ருதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வைத்த நிலையில், உடனடியாக மீனாவுக்கு ஒரு ஆர்டர் வருகிறது. இரண்டாயிரம் கொடுத்து ஒரு பொக்கேவை ஆர்டர் செய்திருக்கிறார்கள் என மீனா சொன்னதும் முத்து செம குஷியாகிறார். அண்ணாமலையும், நல்ல பொருளை வாங்க எப்பவுமே ஆள் இருப்பாங்க என பாராட்டுகிறார்.

24
முத்துவை தரக்குறைவாக பேசும் அருண்

பொக்கேகளை டெலிவெரி செய்ய மீனா செல்லும் வழியில் தன் தங்கச்சியையும் அருணையும் பார்க்கிறார். அப்போது தன்னுடைய புது பிசினஸ் பற்றி மீனா சொன்னதும் அவரை வாழ்த்தும் அருண், நீங்க பண்ணுவது கரெக்டான பிசினஸ், உங்க கணவனை விட நீங்க சீக்கிரமே முன்னேறிவிடுவீர்கள். சாதாரண ஒரு டிரைவராக இருப்பதில் என்னங்க வளர்ச்சி இருக்கப் போகுது. எந்த பிசினஸில் முன்னேற்றம் இருக்கிறதோ அந்த பிசினஸை தான் பண்ணனும், அதை நீங்க சிரியா செய்றீங்க. டிரைவருங்களுக்கு பக்கத்துல உட்கார வச்சு சாப்பாடு கூட கொடுக்க மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா பேசி முத்துவையும் உங்க பிசினஸுக்கு கொண்டு வந்துருங்க என மட்டம் தட்டும் வகையில் பேசுகிறார் அருண்.

34
அருணுக்கு மீனா கொடுத்த பதிலடி

அருணின் பேச்சால் டென்ஷன் ஆன மீனா, டிரைவராக இருந்தால் முன்னேற முடியாதுனுலாம் கிடையாதுங்க. என் புருஷன் மொதல்ல வாடகை கார் தான் ஓட்டிகிட்டு இருந்தார். இப்போ சொந்தமா ரெண்டு கார் வச்சிருக்காரு. சீக்கிரமே அவரும் நிறைய கார் வாங்கி டிராவல்ஸ் ஆரம்பிக்க போறாரு. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வளர்ச்சியடைய முடியும். ஒரு மனுஷன நாம பார்க்குற பார்வையில தான் இருக்கு என அருணுக்கு நோஸ்கட் பண்ணும்படி பேசிவிட்டு, தனக்கு டெலிவெரிக்கு நேரம் ஆகிவிட்டதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார் மீனா. பின்னர் சீதாவும் அருணை திட்டுகிறார்.

44
விஜயாவின் டாக்டர் நாடகம்

மறுநாள் விஜயா, தன்னுடைய யோகா செண்டரில் இரத்த தான முகாம் நடத்துவதாக கூறி தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் அங்கு அழைத்து செல்கிறார். அப்போது விஜயாவை வீடியோ எடுக்க மீடியாவில் இருந்தெல்லாம் ஆள் வந்திருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின்னர் முதல் ஆளாக இரத்த தானம் கொடுக்கும் விஜயா, சோர்ந்து போய் கிடக்கிறார். பின்னர் பேட்டி எடுக்க வருகிறார்கள் என சொன்னதும் சுறுசுறுப்பாகிவிடுகிறார். இதைப்பார்த்த முத்துவுக்கும் மீனாவுக்கும் டவுட் வருகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories