நடிகர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த தொகுதியில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தவெக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது. திருச்சி கிழக்கு தொகுதியில் சகாயம், கு.ப.கிருஷ்ணன், நடிகர் ராகவா லாரன்ஸ் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
25
நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியா?
இப்படி ஒரு தகவல் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இது பற்றிய ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இந்நிலையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் முக்கியமான அடியை தான் எடுத்து வைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருப்பதை அடுத்து தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
35
நடிகர் ராகவா லாரன்ஸ் பரபரப்பு அறிக்கை
இதுதொடர்பாக இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில்: எதையும் எதிர்பாராமல், உங்களின் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். எனக்கு உங்களின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவை. நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, ஏதேனும் ஒரு பதவியைப் பிடிக்க வேண்டும் என்றோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை. நான் முழுமையாக நம்பும், எனக்கு மிக நெருக்கமான ஒருவர் அரசியலில் தடம் பதித்தால், அவருக்குப் பக்கபலமாக நின்று, ஒரு தனிமனிதனாக நான் செய்து வரும் சமூகச் சேவையை விட இன்னும் பெரிய அளவில் சமுதாயத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே எண்ணமாக இருந்தது.
ஆனால் இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் களம் காண வேண்டிய ஒரு புள்ளிக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளன. இன்று காலை 10:00 மணிக்கு நான் வெளியிடும் இந்த வீடியோவில், அரசியல் பற்றிய எனது புரிதல், அது எப்படி என் வாழ்க்கைக்குள் நுழைந்தது, அரசியலைப் பற்றிய எனது தாயாரின் பார்வை மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான, சுவாரசியமான சம்பவங்கள் என அனைத்தையும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து முற்றிலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
55
உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த வீடியோவை இறுதிவரை பார்த்துவிட்டு, உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன் நான் எடுத்து வைக்கும் இந்த மிக முக்கியமான அடியில், உங்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் எனக்குப் பெரும் துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.