Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இராவணன், ஆதி குணசேகரன் வீட்டுக்கே வந்து அவரின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க ஒருபுறம் ஜனனி அலையும் நிலையில், மறுபுறம் இராவணன், ஆதி குணசேகரனின் வீட்டுக்கே வந்து அவருடன் அமர்ந்து பேசியதோடு, தர்ஷினியை நானே காப்பாற்றுகிறேன் என உறுதியளித்துள்ளார். ஆதி குணசேகரனும் அந்த இராவணனை மலைபோல் நம்ப ஆரம்பித்துள்ளார். அவருக்கு தன் வீட்டிலேயே தடபுடலாக விருந்தும் வைத்திருக்கிறார். ஆனால் ஆதி குணசேகரன் வீட்டில் சாப்பிட மறுக்கும் இராவணன், இங்கு சாப்பிட்டால் மொத்தமாக உங்க குடும்பத்துக்கு அடிமையாகிவிடுவேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தர்ஷினியை தேடி அலைந்து டயர்டு ஆகும் ஜனனி, சோர்ந்துபோய் நின்றபடி அருந்ததியிடம் பேசுகிறார். எல்லா இடத்துலயும் தேடிட்டோம். நம்மளால ஏன் இதுக்கு மேல கண்டுபிடிக்க முடியல, இனி என்ன பண்ணனும் ஒவ்வொரு வீடு வீடா ஏறி தேடணுமா, அப்பதான் கண்டுபிடிக்க முடியும் போல என சொல்ல, அது அவ்வளவு ஈஸி கிடையாது ஜனனி என சொல்லும் அருந்ததி, இங்க நல்லவங்க எவ்வளவு இருக்காங்களோ, அதைவிட நிறைய கெட்டவங்களும், அவங்களுக்கெல்லாம் உதவி பண்றவங்களும் இருக்காங்க. அதனால டக்குனு உள்ள போய் விசாரிச்சிட முடியாது என கூறுகிறார்.
35
அருந்ததி கொடுத்த ஐடியா
இதையடுத்து பேசும் ஜனனி, அப்படினா நீங்க பார்த்த ஆளு இங்க தான இருக்கான், இந்த ஏரியால தான இருக்கான். நாம நெருங்கிட்டோம்ல என ஜனனி கேட்க, அதற்கு அருந்ததி, ஆமா நெருங்கிட்டோம், ஆனால் இதுக்குமேல ஒரு அடி எடுத்து வைக்குறதும் ரிஸ்க். கொஞ்ச நேரம் அமைதியா இருப்போம். எப்படியும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும், அதுக்கப்புறம் பார்த்துக்கலாம் என கூறுகிறார். நம்மளால அவங்கள சமாளிக்க முடியுமா அருந்ததி என ஜனனி கேட்க, அதற்கு அவர் முடியணும், நாம சுயநினைவோட இருக்கோம். அவனுங்க போதையில இருக்கானுங்க. அதனால நான் முன்னால போறேன், நீங்க பின்னால வாங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறார் அருந்ததி.
மறுபுறம் இராவணனை வீட்டு வாசலில் வந்து வழியனுப்பும் ஆதி குணசேகரன், நான் உங்களை என் இரத்தமா நினைக்குறேன் என சொல்ல, அதற்கு இராவணனும், அப்படி தான் சார் நானும் நினைக்குறேன். நானும் உங்க இரத்தம் தான் என சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கதிர், என்ன அண்ணன் இவன் மேல இம்புட்டு பாசம் காட்டுறாரு என பொறாமைப்படுகிறார். இதையடுத்து தன் தம்பிகளை மாடிக்கு அழைத்து சென்று பேசுகிறார் ஆதி குணசேகரன். அப்போது தர்ஷினியை எப்படி மீட்கலாம் என இருவரிடமும் ஆலோசிக்கிறார்.
55
குணசேகரனை எச்சரிக்கும் கதிர்
ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வருவதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ஆதி குணசேகரனிடம் அறிவுறுத்தி இருந்தார் வக்கீல். ஆனால் தற்போது இராவணன் பேச்சைக் கேட்டு ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கிறார் ஆதி குணசேகரன். தப்பு பண்றீங்க அண்ணேன் என கதிர் எதிர்த்தாலும், தனக்கு இது சரியாக படுகிறது என கூறிவிடுகிறார் குணசேகரன். இதனால் இனி கதிரே ஆதி குணசேகரனை எதிர்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.