Siragadikka Aasai : டைவர்ஸ் விவகாரம்... ரோகிணி எடுத்த தடாலடி முடிவு; மனோஜுக்கு காத்திருக்கும் சிக்கல்

Published : Jun 12, 2026, 08:58 AM IST

Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணியிடம் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடுமாரு வித்யா சொல்லி இருக்கிறார். அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் தம்பி சத்யா, சிந்தாமணியின் மகள் ரேகாவை காதலிக்கும் நிலையில், சிந்தாமணியின் கணவர் தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்ததோடு, சத்யா தான் கடத்தி இருப்பான் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து சத்யாவை கைது செய்த போலீசார் அவனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிவெளுத்தனர். பின்னர் சிந்தாமணியின் கணவர் வேண்டுமென்றே சத்யா மீது பழிபோட்டதை கண்டுபிடித்த மீனா, ரேகா, வீட்டில் தான் இருக்கிறார் என்று ஆதாரத்துடன் நிரூபித்ததை அடுத்து சத்யாவை போலீசார் விடுதலை செய்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : தர்ஷினியை மீட்க களத்தில் குதிக்கும் இராவணன்... ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ஜனனி..!

25
சந்தோஷத்தில் விஜயா

பிரச்சனை முடிந்து முத்துவும், மீனாவும் வீட்டுக்கு வந்த நிலையில், அண்ணாமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். அப்போது சத்யாவும், சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார் மீனா. அதைக்கேட்டதும் குஷியான விஜயா, நான் ஒரு தீர்க்கதர்சி தான் போல, நான் ஏற்கனவே சிந்தாமணிகிட்ட சாபம் விட்டுட்டு தான் வந்தேன். உன் மகன் எவனாவது இல்லாதவன் கூட தான் ஓடிப்போகப் போறானு சாபம் விட்டேன். அது நடந்திருச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம் என கூறுகிறார்.

35
மீனாவை மட்டம் தட்டும் விஜயா

அதுமட்டுமின்றி மீனாவின் குடும்பத்தையும் மட்டம் தட்டி பேசும் விஜயா, அது எப்படி உங்க குடும்பத்துல மட்டும் இப்படி பணக்கார வீட்டுக்காரங்களா பார்த்து லவ் பண்றீங்க என சொல்ல, அதற்கு பதிலடி கொடுத்த முத்து, இவங்க மட்டும் என சும்மாவா, பணக்கார குடும்பம்னு பார்லர் அம்மாவை கூட்டிட்டு வந்தாங்க, அது அதோட வேலையை காட்டிடுச்சு. பணக்கார சம்மந்தினு ஸ்ருதி வீட்டுக்கு போனாங்க, அவங்களும் சிறப்பா கவனிச்சு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனக்கு சிந்தாமணி பண்ண துரோகத்துக்கு தான் அவளுக்கு இந்த நிலைமை என கூறுகிறார் விஜயா.

45
ரோகிணியை சந்திக்கும் வித்யா

மறுபுறம் ரோகிணியின் அம்மா வித்யாவுக்கு போன் போட்டு வீட்டுக்கு வரச் சொல்லி, ரெண்டு நாளா ரோகிணி சாப்பிடவே இல்ல, எதுவும் பேசாம அமைதியாவே இருக்கா, நீ போய் என்ன பிரச்சனைனு கேளு என சொல்லி அனுப்பி வைக்கிறார். ரூமுக்குள் சென்ற வித்யா, என்ன ஆச்சு என கேட்கையில் கண்ணீர்விட்டு அழும் ரோகிணி, பேச கூட ஆள் இல்லாம தனியா இருக்கேன். ஏண்டா வாழுறோம்னு இருக்கு வித்யா, நானே மனோஜ் கூட வாழனும்னு போராடிக்கிட்டு இருக்கேன். மனோஜுக்கும் என்மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திடுச்சு. ஆனா இப்பவும் அவன் அம்மா சொல்றத தான் கேக்குறான் என சொல்லி ஃபீல் பண்ணுகிறார் ரோகிணி.

55
ரோகிணி எடுத்த முடிவு

நீ நிம்மதியா வாழ ஒரு ஐடியா சொல்றேன். நீ பேசாம மனோஜுக்கு டைவர்ஸ் கொடுத்திரு என கூறுகிறார் வித்யா. என்னைக்குமே உன் மாமியார் உன்னை ஏத்துக்கவே மாட்டாங்க. இதுக்கு மேல நீ கோர்ட்டு கேஸ்னு அழையுறது உன்னோட வாழ்க்கைக்கு தான் நல்லதில்ல என சொல்கிறார் வித்யா. ஆனால் ரோகிணி, தன்னால் மனோஜை பிரிந்து வாழமுடியாது என கூறிவிடுகிறார். அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாது. அவனுக்கு டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories