தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மாறன்' திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா , ஜூலை 30 ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
உடல்நலம் நன்றாக இருக்கும் போதே, சில நடிகைகள் பட விழாக்களில் கலந்து கொள்ள பந்தா காட்டும் நிலையில், சமீபத்தில் நித்யா மேனன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அந்த கட்டுடன் வீல் சேரில் வந்து இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நடிகை நித்யா மேனனின் இந்த செயலை கண்டு பலர் ஆச்சர்யமடைதது மட்டும் இன்றி பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்,
மேலும் செய்திகள்: பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!