Published : Aug 01, 2022, 01:09 PM ISTUpdated : Aug 01, 2022, 01:11 PM IST
15 நாட்களில் இந்த படம் ஓடிடிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ட்ரெய்லருடன் படம் டிஜிட்டல் பிரிமியர் விற்பனை குறித்தும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா சமீப காலமாக தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து மாற்று மொழிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ள இவர் பாலிவுட் நாயகிகள் போல கொழுகொழுவென இருந்த உடலை ஒல்லி பெல்லியாக மாற்றியுள்ளார். ஸ்லிம் பிட்டான அமுல் பேபி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தன வலைதளப்பாக்கம் மூலம் பகிர்ந்து வருகிறார்.
24
maha
இவர் இறுதியாக மஹா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டரில் பெண் சாமியார் வேடமிட்டு ஹன்சிகா சுருட்டு மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இருந்தன. இதனால படம் வெளியாகும் முன்னரே பலரின் எதிர்ப்புகளை பெற்று சர்ச்சைக்கு உள்ளானது.இவற்றையெல்லாம் தாண்டி தற்போது படம் திரைக்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த படத்தில் இவரது முன்னாள் காதலன் சிம்பு பல ஆண்டுகளுக்கு பிறகு ஹன்சிகாவுடன் நடித்துள்ளார். மநாயகியின் 50 வது படமான இது மர்மம் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதை இயக்குனர் யூ ஆர் ஜமீல் உருவாக்கியுள்ளார்.
சனம் செட்டி, தம்பி ராமையா மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மஹாவில் சிம்பு காமியோ ரோலில் தோன்றியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு மூன்றாண்டு தாமதத்திற்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூலி தான்லை பெற்றிருந்தது.
இந்நிலையில் 15 நாட்களில் இந்த படம் ஓடிடிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ட்ரெய்லருடன் படம் டிஜிட்டல் பிரிமியர் விற்பனை குறித்தும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
44
maha
திரைப்பட வெளியீட்டுக்கு பிறகு படம் குறித்து பேசிய ஹன்சிகா..மஹா தனது ஹன்சிகா, தனது ஐம்பதாவது படம் தன கேரியரில் முக்கியமான படம் என்றும், இந்த படத்தில் தான் அம்மாவாக நடித்ததாகும், படம் தன்னை வித்தியாசமான பரிமாணத்தில் காட்டிதாகவும் கூறினார். அதோடு கேமியோவில் நடித்தது மூலம் நடிகர் சிம்பு மிகவும் உதவியாகும் ஆதரவாகவும் இருந்ததாக நடிகை கூறியுள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.