Salman khan : கொலை மிரட்டல் எதிரொலி... சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கிய போலீஸ்

Published : Aug 01, 2022, 11:45 AM IST

Salman khan : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தற்போது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

PREV
14
Salman khan : கொலை மிரட்டல் எதிரொலி... சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கிய போலீஸ்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபி ஈத் கபி தீபாவளி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆன பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது.

24

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை கொலை செய்த கும்பல் தான் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்... வா மச்சி பாத்துக்கலாம்னு கூட்டிட்டு போன கார்த்தி... குதிரையில் இருந்து விழுந்த கதையை சொன்ன ஜெயம் ரவி

34

இதனிடையே மும்பை மாநகரின் புதிய போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் பன்சல்கரை சமீபத்தில் சந்தித்த நடிகர் சல்மான் கான், அவரிடம் தனக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தார். கமிஷனர் விவேக் பன்சல்கரும் இதுகுறித்து ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறி இருந்தார்.

44

இந்நிலையில், தற்போது சல்மான் கானின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து தற்காப்புக்காக அவருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... அசைவத்துக்கு நோ சொல்லிவிட்டு... திடீரென சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரகுமான் - வைரல் பதிவின் பின்னணி என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories