வா மச்சி பாத்துக்கலாம்னு கூட்டிட்டு போன கார்த்தி... குதிரையில் இருந்து விழுந்த கதையை சொன்ன ஜெயம் ரவி

Published : Aug 01, 2022, 10:49 AM IST

Jayam Ravi : பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடலின் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

PREV
15
வா மச்சி பாத்துக்கலாம்னு கூட்டிட்டு போன கார்த்தி... குதிரையில் இருந்து விழுந்த கதையை சொன்ன ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் எடுக்க முயற்சித்த பொன்னியின் செல்வன் கதையை, வெற்றிகரமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திய பட்டாளமே நடித்துள்ளது. 

25

லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வெளியிட உள்ளனர். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவுக்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டா தரணி, படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என அனுபவம் மிக்க டெக்னிக்கல் டீமும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

35

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. சமீபத்தில் இதன் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... அசைவத்துக்கு நோ சொல்லிவிட்டு... திடீரென சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரகுமான் - வைரல் பதிவின் பின்னணி என்ன தெரியுமா?

45

இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, தான் குதிரை ஓட்ட கற்றுக்கொண்டது பற்றி கூறினார். அப்போது அவர் பேசியதாவது : “எனக்கு குதிரைனாலே பயம். கார்த்தி தான், வா மச்சி நம்ம பாத்துக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு போவாரு. அவர் தான் எனக்கு மிகவும் உதவி செய்தார். இவரைப்போல் ஒரு நண்பர் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.

55

ஒருநாள் நான் ஹோட்டலில் இருந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு செய்தி வந்துச்சு. கார்த்தி குதிரைல இருந்து கீழ விழுந்துட்டாருனு. அதைக் கேட்டதும் எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. அப்பறம் தான் நெனச்சேன், நல்ல குதிரை ஓட்ட தெரிஞ்ச கார்த்தியே விழுந்துட்டாருனா... நம்மலாம் என்ன பண்றது. ஆனா மணி சார், “என்னுடைய பாடல் உனக்கு பிடிக்கவில்லை, அதனால் என்னை கிழே தள்ளிவிட்டாயா” அப்டினு குதிரை டயலாக் பேசுற மாதிரி போட்டு நான் வேறமாறி யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு. இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் கலாட்டாவா இருக்கும்” என கூறினார்.

இதையும் படியுங்கள்... Nayanthara : லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் நயன்தாரா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories