தொடர்ந்து நிர்வாணமா போட்டோஷூட் நடத்துங்க ரன்வீர்.. உங்கள இப்படி பார்க்கதான் விரும்புறேன்- பிரபல நடிகை கோரிக்கை

Published : Aug 01, 2022, 09:09 AM IST

rakhi sawant : பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

PREV
15
தொடர்ந்து நிர்வாணமா போட்டோஷூட் நடத்துங்க ரன்வீர்.. உங்கள இப்படி பார்க்கதான் விரும்புறேன்- பிரபல நடிகை கோரிக்கை

பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் தான் பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளார். இதற்கு காரணம் இவர் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தான். இவர் ஆடையின்றி நடத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரல் ஆனது.

25

அவரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டுக்கு கிடைத்த ஆதரவை விட எதிர்ப்புகள் தான் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக மும்பையில் உள்ள காவல்நிலையத்தில் ரன்வீருக்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. அவர் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

35

எதிர்ப்புகள் அதிகளவில் வந்தாலும், ஏராளமான திரையுலக பிரபலங்கள் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவுக்குரல் எழுப்பினர். தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் ரன்வீரை ஆதரிக்கும் விதமாக தானும் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் அண்ணாச்சி... வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியது ‘தி லெஜண்ட்’

45

இந்நிலையில், இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தான் துபாயில் இருந்து திரும்பியது முதல் எங்கு பார்த்தாலும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் பற்றிய பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஹேண்ட்சமாக உள்ளார்.

55

ஆடையின்றி போஸ் கொடுத்து நமது நாட்டு பெண்களுக்கு அவர் நல்லது செய்திருக்கிறார். என் நண்பா ரன்வீர், நீங்கள் இதுபோல தொடர்ந்து நிர்வாணமாக போட்டோஷூட் நடத்த வேண்டும். உங்களை இப்படிப் பார்க்கத்தான் நான் விரும்புகிறேன் என ராக்கி சாவந்த் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரன்வீருக்கு ஆதரவு..! மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த கிரண் - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories