பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் அண்ணாச்சி... வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியது ‘தி லெஜண்ட்’

Published : Aug 01, 2022, 08:22 AM ISTUpdated : Aug 01, 2022, 03:10 PM IST

The Legend movie Box Office : ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் வெளியாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் மூலம் தொழிலதிபர் சரவணன் அருள் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

PREV
15
பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் அண்ணாச்சி... வசூலில் பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியது ‘தி லெஜண்ட்’

சரவணன் அருள் நடிப்பில் கடந்த ஜூலை 28-ந் தேதி ரிலீசான படம் ‘தி லெஜண்ட்’. சரவணன் நடித்த முதல் படமாக இது இருந்தாலும், இப்படத்துக்கு ரஜினி பட ரேஞ்சுக்கு புரமோஷன் செய்யப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் பெரும்பாலும் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படும். அந்த பெருமையை அறிமுக படத்துலேயே பெற்றுவிட்டார் சரவணன்.

25

தமிழில் உருவான இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம்... லெஜண்ட் பட நாயகிக்கு வாரி வழங்கிய அண்ணாச்சி - எத்தனை கோடி தெரியுமா?

35

இந்நிலையில், கேரளாவில் தி லெஜண்ட் திரைப்படம் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரபாஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். பான் இந்தியா படமாக வெளியிடப்பட்ட இப்படம் பிரபாஸின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

45

இப்படம் கேரளாவில் ரிலீசான முதல் நாளில் ரூ.4 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்ததாம். தற்போது சரவணன் நடிப்பில் வெளியாகி உள்ள லெஜண்ட் திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ.4.7 லட்சம் வசூலித்து பிரபாஸ் படத்தையே பின்னுக்கு தள்ளி உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

55

சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கினர். இப்படத்தில் ஹீரோயினாக ஊர்வசி ரவ்துலாவும், வில்லனாக சுமனும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது. இதில் ஹீரோயினாக நடித்துள்ள ஊர்வசி ரவ்துலாவுக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் அண்ணாச்சி... அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

Read more Photos on
click me!

Recommended Stories