முதல் குழந்தை பிறந்து ஒருவருஷம் கூட ஆகல, அதற்குள் 2-வது குழந்தையா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா

Published : Aug 01, 2022, 07:32 AM IST

Priyanka Chopra : பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் குழந்தை பிறந்த நிலையில், அவர்கள் விரைவில் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
முதல் குழந்தை பிறந்து ஒருவருஷம் கூட ஆகல, அதற்குள் 2-வது குழந்தையா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரியங்கா, ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.

24

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்தனர். அதுவும் வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தையை பெற்றுக்கொண்டனர். அத்தம்பதி தங்களது பெண் குழந்தைக்கு மல்டி மேரி என பெயர் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அக்குழந்தை 3 மாதங்கள் ஐசியூவில் இருந்ததாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பிரியங்கா சோப்ரா உருக்கம்

34

இவ்வாறு முதல் குழந்தை பிறந்து 7 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது பிரியங்கா - சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதி அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் குழந்தையை போன்றே இந்த குழந்தையையும் வாடகைத் தாய் மூலமே பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

44

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் முதல் குழந்தை பிறந்து ஒரு வருஷம் கூட ஆகல அதற்கு இரண்டாவது குழந்தையா என ஷாக் ஆகினாலும், மறுபுறம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அத்தம்பதி இதுவரை இரண்டாவது குழந்தை குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

click me!

Recommended Stories