இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அவரின் ஆதிக்கம் தான் அதிகளவில் இருக்கும். ஏனெனில் அவர் இசையமைத்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. கடந்த மாதம் இரவின் நிழல் படம் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றது.
24
இந்த மாதம் அவர் இசையமைத்த மற்றொரு படமான விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் ஏ.ஆர்.ரகுமான் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் இருந்து பொன்னி நதி என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானே பாடி உள்ள இப்பாடலுக்கு வெளியானது முதல் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
44
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த 10 நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன் என குறிப்பிட்டு தட்டில் இருக்கும் சைவ உணவை புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தார். அசைவ பிரியரான ஏ.ஆர்.ரகுமான் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர் மொஹரம் பண்டிகைக்கு முந்தைய 10 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவாராம். வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தான் அவர் தற்போது சைவத்து மாறி உள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.