Amala Paul : தியேட்டரில் கார்னர் சீட் டிக்கெட் வாங்கி... காதலனுக்கு முத்தம் கொடுத்த அமலாபால் - இது எப்போ?

Published : Aug 01, 2022, 12:41 PM IST

Amala Paul : விஜய் டிவியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு நடத்தும் ராஜு வீட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை அமலா பால், தனது டீனேஜ் காதல் பற்றி அதில் பேசினார்.

PREV
16
Amala Paul : தியேட்டரில் கார்னர் சீட் டிக்கெட் வாங்கி... காதலனுக்கு முத்தம் கொடுத்த அமலாபால் - இது எப்போ?

மலையாள நடிகையான அமலாபால், சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமாகி பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் அமலாபால்.

26

தலைவா படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான ஏ.எல்.விஜய் மீது காதல் வயப்பட்டார் அமலாபால். இதையடுத்து சில ஆண்டுகள் காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்தார் அமலாபால். இதன்பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலாபால்.

36

விவாகரத்துக்கு பின் படு போல்டான வேடங்களில் துணிந்து நடித்து வந்தார் அமலாபால். குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. 

இதையும் படியுங்கள்... Salman khan : கொலை மிரட்டல் எதிரொலி... சல்மான் கானுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கிய போலீஸ்

46

தற்போது கடாவர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளது மட்டுமின்றி, அப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அமலாபால். இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது.

56

இந்நிலையில், விஜய் டிவியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு நடத்தும் ராஜு வீட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகை அமலாபால் கலந்துகொண்டு தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தனது டீனேஜ் காதல் குறித்தும் அந்த ஷோவில் அவர் பேசினார்.

66

அதன்படி, டீனேஜில் தான் ஒருவரை காதலித்ததாக தெரிவித்த அமலாபால், அவருடன் தியேட்டருக்கு சென்று கார்னர் சீட் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததாகவும், அப்போது அந்த காதலனுக்கு தான் முத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த காதலன் யார், அவர் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதையும் படியுங்கள்... அசைவத்துக்கு நோ சொல்லிவிட்டு... திடீரென சைவத்துக்கு மாறிய ஏ.ஆர்.ரகுமான் - வைரல் பதிவின் பின்னணி என்ன தெரியுமா?

click me!

Recommended Stories