தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது கோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட் திரையுலகிலும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியாகி, ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்திய 'பதான்' படத்தின் ஹீரோவும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.