விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கலகலப்பாக மாற்ற முடியுமா? என பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு, ஒவ்வொரு வாரமும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு படிஆர்பியில் டப் கொடுத்து வருகிறது.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், கடந்த மூன்று சீசன்களாக தன்னுடைய காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து வந்தவர் மணிமேகலை. இதில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, போன்றோர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகின்றனர். அதே போல் கோமாளிகளாக இருக்கும் பிரபலங்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த இளம் நடிகர் - நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
'சர்தார்' வெற்றியை தொடர்ந்து... அடுத்தடுத்த படங்களில் பிசியாகும் லைலா! வெளியான புது பட தகவல்..!
கடந்த சீசனில் அவ்வபோது புகழ் இந்த குக் வித் கோமாளி செட்டுக்கு விசிட் அடித்த நிலையில், இந்த சீசன் முழுவதும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாலா கடந்த சீசன் முழுவதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தன்னுடைய காமெடியால் கலகலப்பாக மாற்றிய நிலையில், இந்த முறை படப்பிடிப்பில் பிசியாகி விட்டதால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் இதுவரை மணிமேகலை இது குறித்து வாய் திறக்காத நிலையில், குக் வித் கோமாளி சக போட்டியாளர்களும்... நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அவரின் விருப்பம் என்பது போல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் செஃப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றியில், மணிமேகலை விளங்கியது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது... குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை மணிமேகலையின் காமெடியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் என்னுடைய மகள் போன்றவர். இந்த நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேறியது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்புதான். அதே நேரத்தில் அவர் விரும்பி எடுத்த முடிவு இது.அடுத்த கட்ட தொகுப்பாளினி உட்பட ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளார். எனவே அவரது எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து மணிமேகலைக்கு பலரும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
66 வயதில் மறைந்த பாலிவுட் இயக்குனர் சதீஷ் கௌஷிக்குக்கு 10 வயதில் மகள்! அவர் மனைவி யார் தெரியுமா?