காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் அர்ச்சனா. இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையில் இருந்து சில ஆண்டுகள் விலகியே இருந்த அர்ச்சனா, பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்தார். ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார் அர்ச்சனா. அதில் அன்பு தான் ஜெயிக்கும் என சொல்லி ஒரு ரியோ, அறந்தாங்கி நிஷா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு விளையாடி வந்த அர்ச்சனாவை அன்பு கேங் என சொல்லி கடுமையாக ட்ரோல் செய்தனர். அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது மகள் சாரா உடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா, தான் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அர்ச்சனா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வினீத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் இருக்கிறார்.
வினீத் கடற்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடும் இருந்து வந்ததாம். இதன்காரணமாக கடந்த மாதம் தாங்க இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என பேசிக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதன்பின் அவர்கள் இருவரையும் அவரது மகள் சாரா தான் சமாதானப்படுத்தி இருவரிடமும் மனம்விட்டு பேசினாராம். அதன்பின்னர் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு, 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி காதலித்தார்களோ அதேபோல் தற்போதும் காதலித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார் அர்ச்சனா.
இதையும் படியுங்கள்... இரண்டாம் திருமணம் செய்யப்போகிறாரா நடிகர் தனுஷ்?... காட்டுத்தீ போல் பரவும் தகவல் - பின்னணி என்ன?