சினிமா நடிகைகளுக்கு நிகராக தற்போது சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் சோசியல் மீடியா தான். அதில் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது ரசிகர்கள் வட்டத்தை நடிகை பெரிதாக்கி வருகின்றனர்.
சோசியல் மீடியா மூலம் பாபுலர் ஆன சீரியல் நடிகைகளில் நடிகை ஜனனி அசோக் குமாரும் ஒருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி, முதன்முதலில் நடித்தது நண்பேண்டா என்கிற திரைப்படத்தில் தான். இப்படத்தில் நயன்தாராவுடன் சிறிய கேரக்டரில் நடித்தார் ஜனனி.
அந்த வகையில் அவர் நடித்த முதல் தொடர் மாப்பிள்ளை. இதையடுத்து மெளன ராகம், செம்பருத்தி போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
நடிகை ஜனனிக்கு இன்ஸ்டாகிராமிலும் 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜனனி.