Pandian Stores
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டத்தை பற்றி மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்த சீரியலுக்கு பெண்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை. குடும்ப தலைவிகளின் முக்கிய சீரியலில் இதுவும் ஒன்று. அதுமட்டுமில்லை தொடர்ந்து நல்ல ரேட்டிங்கிலும் இருந்து வருகிறது.
Pandian stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியல் தற்போதுவரை ஆயிரம் எபிசோடிகளை கடந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பேர்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை பல்வேறு நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர். இப்போது மேலும் ஒரு நடிகை மாற்றப்பட இருக்கிறார்.
pandian stores
பாண்டியன் ஸ்டோரின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை 3 நடிகைகள் மாற்றப்பட்டுவிட்டனர். அதே போல் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்திற்கும் 3 பேர் மாறி இருக்கின்றனர். தற்போது மீண்டும் அவர் மாற்றப்பட இருக்கிறார். சீரியலின் ஆரம்ப கட்டத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவர் விலகிய நிலையில் விஜே தீபிகா நடித்தார். அவரும் விலகிய நிலையில் சாய் காயத்திரி நடித்து வந்தார்.
சாய் காயத்திரி தன் பதிவில், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேன். காரணம் அந்த கதாப்பாத்திரம் தற்போது எனக்கு ஏற்றதாக இல்லை. இனி சீரியலில் வரும் கதை நகர்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எனக்கும் என் வருங்கால பணிக்கும் சரியானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே நாள் விலகுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் எனது இந்த முடிவினை மதித்த விஜய் டிவிக்கு நன்றி எனவும் சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.
அட்ஜஸ்மெண்ட் பண்ண ரெடியானு போன் பண்ணி கேட்டாங்க... பகீர் தகவலை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் நடிகை