விரைவில் வரப்போகுது குட் நியூஸ்... தனுஷின் அண்ணன் செல்வராகவனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென சந்தித்தது ஏன்?

Published : Mar 10, 2023, 02:31 PM IST

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனை சந்தித்து பேசி உள்ளார்.

PREV
14
விரைவில் வரப்போகுது குட் நியூஸ்... தனுஷின் அண்ணன் செல்வராகவனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென சந்தித்தது ஏன்?

நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இதுவரை 3 மற்றும் வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுத்துள்ள ஐஸ்வர்யா லால் சலாம் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

24

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடிக்கிறார். அவருக்கு தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்கிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... தமிழ் படங்களில் நடிக்க நடிகை இலியானா-வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா..! வெளியான ஷாக்கிங் தகவல்

34

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்காலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவனை நடிக்க வைக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து சமீபத்தில் அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் கூறப்படுகிறது.

44

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக நடிப்பில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் லால் சலாம் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தனுஷை விவாகரத்து செய்த பின்பும் செல்வராகவன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா நட்புடன் பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் கலக்கிய ஜெயம் ரவி... அகிலன் ஆக அசத்தினாரா? சொதப்பினாரா? - விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories