தமிழ் படங்களில் நடிக்க நடிகை இலியானா-வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா..! வெளியான ஷாக்கிங் தகவல்

Published : Mar 10, 2023, 01:59 PM ISTUpdated : Mar 10, 2023, 02:00 PM IST

நடிகை இலியானாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

PREV
16
தமிழ் படங்களில் நடிக்க நடிகை இலியானா-வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா..! வெளியான ஷாக்கிங் தகவல்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. இதையடுத்து தமிழில் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற இலியானாவுக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதையடுத்து அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் படிப்படியாக இலியானாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்ததால் பிசியான நடிகையாக வலம் வந்தார்.

26

இதையடுத்து விஜய்யின் நண்பன் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் இலியானா. ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ஒல்லி பெல்லி பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி அசத்திய இலியானாவை ரசிகர்கள் செல்லமாக ஒல்லி பெல்லி நடிகை என்றும் அழைக்கத் தொடங்கினர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போதும் நடிகை இலியானாவுக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

36

இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்கிற புகைப்படக் கலைஞரையும் சில ஆண்டுகள் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார் இலியானா. 

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனில் கலக்கிய ஜெயம் ரவி... அகிலன் ஆக அசத்தினாரா? சொதப்பினாரா? - விமர்சனம் இதோ

46

இந்த காதல் தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து மீள அதிகளவில் மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் உடல் எடையும் அதிகரித்து குண்டானார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதனிடையே நடிகை இலியானா நீண்ட நாட்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

56

அதன்படி நடிகை இலியானாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க கோலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். நீண்ட நாட்கள் ஆகியும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ள இலியானா, அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பாளர், இலியானா மீது தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் புகார் தெரிவித்தாராம்.

66

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை இலியானா தரப்பிலும் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பல்லுபோன வயசுல பக்கோடா வா...! 60 வயதில் 4-வது திருமணம் செய்துகொண்ட நடிகர் - பிரபல நடிகையை மணந்தார்

click me!

Recommended Stories