பொன்னியின் செல்வனில் கலக்கிய ஜெயம் ரவி... அகிலன் ஆக அசத்தினாரா? சொதப்பினாரா? - விமர்சனம் இதோ
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அகிலன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் அகிலன். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். நடிகை தன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் கெரியரில் அதிக திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்நிலையில், படம் பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அந்த கேரக்டர் சரி இல்ல - எனக்கு வேண்டாம் - பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகும் நடிகை! யார் அவர்!
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “அகிலன் படத்தில் ஜெயம் ரவி மிரட்டி இருக்கிறார். படத்தின் திரைக்கதையும், எடிட்டிங்கும் தரமாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சாம் சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டிட்டாரு. பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு சூப்பர். முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இருந்தது. மொத்தத்தில் செம்ம படம்” என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “அகிலன் படத்தில் ஜெயம் ரவி, கதாபாத்திரங்கள் தேர்வு, ஆக்ஷன் காட்சிகள், ஒளிப்பதிவு, தயாரிப்பு, பின்னணி இசை ஆகியவை பாசிடிவ் ஆக அமைந்ததாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வை தருவதே இப்படத்தின் நெகட்டிவ் ஆக அமைந்ததாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், “அகிலன் படத்தின் முதல் பாதி வெறித்தனமாக இருந்தது. ஜெயம் ரவியின் நடிப்பு அல்டிமேட். இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மற்றபடி குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இது அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “அகிலன் டீசண்ட் ஆன எண்டர்டெயினர். முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். அனைத்து நடிகர்களின் நடிப்பும் நேர்த்தியாக இருந்தது. சாம் சி.எஸ். பின்னணி இசை தரமாக இருந்தது. இரண்டாம் பாதி மட்டும் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பல்லுபோன வயசுல பக்கோடா வா...! 60 வயதில் 4-வது திருமணம் செய்துகொண்ட நடிகர் - பிரபல நடிகையை மணந்தார்