கோடிகளில் முதலீடு.. தொழிலதிபராக மாறி வரும் நயன்தாரா.. என்னென்னெ பிசினஸ் செய்றாங்க தெரியுமா?

Published : Nov 18, 2023, 11:17 AM ISTUpdated : Nov 18, 2023, 11:20 AM IST

நயன்தாரா நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது..

PREV
110
கோடிகளில் முதலீடு.. தொழிலதிபராக மாறி வரும் நயன்தாரா.. என்னென்னெ பிசினஸ் செய்றாங்க தெரியுமா?
Nayanthara

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.

210

தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

310

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

410
Nayanthara

நயன்தாரா நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.. அவருக்கு ரூ. 100 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது, இது தமிழ்நாடு முதல் மும்பை வரையிலான அவரது நான்கு ஆடம்பர வீடுகளில் ஒன்றாகும். தற்போது, சென்னையில் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 BHK பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார்.

ஷாருக்கான் பட ரிஜெக்ஷன் முதல் வாடகைத் தாய் பிரச்சனை வரை - லேடி சூப்பர் ஸ்டார் சந்தித்த சில சர்ச்சைகள்!
 

510

இந்த வீட்டில் ஒரு தனியார் திரையரங்கம், நீச்சல் குளம் மற்றும் ஜிம் போன்ற பிரத்யேக வசதிகள் உள்ளன. மேலும் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் நயன்தாராவுக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை. 

610

மேலும் நயன்தாராவிடம் விலை ஆடம்பர கார்களும் உள்ளன. குறிப்பாக ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீட்சித் போன்ற பாலிவுட் நடிகைகளை தவிர, நயன்தாராவிடம் சொந்தமாக ரூ. 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமும் உள்ளது. தென்னிந்திய திரையுலகில் சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

710

நயன்தாரா பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தனது கணவர் விக்னேஷ் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.

அன்று சின்னத்திரை தொகுப்பாளினி.. இன்று லேடி சூப்பர் ஸ்டார் - தடைகள் பல தாண்டி வெற்றி கண்ட நடிகை நயன்தாரா!

810

சாய் வாலே என்ற பிரபலமான நிறுவனத்தில் நடிகை நயன்தாரா ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதில் இருந்தும் அவருக்கு வருமானம் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கினார்,

910
nayanthara

இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் என்று கூறப்படுகிறது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.. இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1010
Nayanthara

மேலும் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றையும் தனது நண்பருடன் சேர்ந்து  அவர் நடத்தி வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் 9Skin என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். இந்த தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த Femi 9 என்ற பெண்களுக்கான சானிடரி நாப்கின் பிராண்டையும் அறிமுகம் செய்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories