“நான் எந்த படத்தையுமே காப்பி அடிச்சது இல்ல.. ஆனா ஏன் அப்படி சொல்றாங்கன்னா..” அட்லீ ஓபன் டாக்

First Published | Nov 18, 2023, 8:39 AM IST

காப்பி கேட் சர்ச்சை குறித்து இயக்குனர் அட்லீ பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த அட்லி, தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறினார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறி உள்ளார். மேலும் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் அட்லீ உள்ளார்.

Tap to resize

Atlee Kumar

ஆனால் அட்லீ மீது வைக்கப்படும் மிகமுக்கிய குற்றச்சாட்டு அவர், மற்ற படங்களில் இருந்து காப்பி அடித்து படங்களை இயக்குகிறார் என்பது தான். உதாரணமாக, ராஜா ராணி, மௌன ராகம் படத்தின் காப்பிட் என்றும், தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் அபூர்வ சகோதரர்களின் காப்பி எனவும் நெட்டிசன்களும், விமர்சகர்களும் விமர்சித்து வந்தனர். அதன்பின்னர் வந்த பிகில், ஜவான் படத்தின் சீன்கள் எல்லாம் வெவ்வேறு படங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த காப்பி கேட் சர்ச்சை குறித்து இயக்குனர் அட்லீ பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் “ நான் ஒருபோதும் வேண்டுமென்றே எந்த படத்தையும் காப்பி அடிக்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான கருத்துகள் பல படங்களில் இயல்பாகவே உள்ளன. காதல் படங்கள், போலீஸ் கதை, கிராமப்புற கதைகள் என வெவ்வேறு பிரிவுகளில் நான் நேர்மையாக வேலை செய்த போது என்னை மட்டுமே தாக்கி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஷாருக்கானையும், விஜய்யையும் வைத்து டபுள் ஹீரோ படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான சூழல் சரியாக அமைந்தால், தனது அடுத்த படம் விஜய் - ஷாருக்கான் கூட்டணியில அமையும் என்றும் கூறினார். மேலும் ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தன்னால் படம் இயக்க முடியும் என்றும் அதற்கான திறமை தன்னிடம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். 

Image: Instagram

ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படம் உலகளவில் ரூ.1100 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!