மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். திரைப்பட தயாரிப்பாளர் ஜி சுரேஷ் – நடிகை மேனகா சுரேஷின் மகளான அவர் 2000-களில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2013-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
29
தொடர்ந்து 2015-ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சர்க்கார், பெங்குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதனிடையே நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்திற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இது தவிர பிலிம்ஃபேர், சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
49
விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் 2021-ம் ஆண்டில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தார்.
59
சமீபத்தில் தெலுங்கில் தசரா, தமிழில் மாமன்னன் போன்ற ஹிட் படங்களிலும் நடித்தார். தொடர்ந்து சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட பல ப்டங்களை கைவசம் வைத்திருக்கும் பிஸி நடிகையாக உள்ளார்.
69
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக 2 பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷை தான் அணுகி உள்ளனர்.
79
அதே போல் தெலுங்கில் நானி – சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கராய் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
89
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவும், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்று கருதி இந்த 2 படங்களிலும் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டாராம்.
அண்ணாத்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்த நிலையில், பொன்னியின் செல்வம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதே போல் நானி நடித்த ஷியாம் சிங்கராய் படமும் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.