அந்த பாம்பும் ஆட்கள் இருக்கும் இடத்திற்கு ஊர்ந்து வர எல்லாரும் பாம்பு வந்து விட்டது, யாரை காட்டி கொடுக்க போகிறது என எதிர்பார்த்து காத்திருக்க இந்த பாம்பு முதலில் கார்த்தியையே பார்த்து விட்டு திடீரென திரும்பி ஐஸ்வர்யாவை கொத்துகிறது. இதனையடுத்து பூசாரி பூஜை நல்லபடியா முடிந்தது, அந்த அம்மனும் தப்பு பண்ணவங்கள கண்டு பிடிச்சி கொடுத்துருச்சு. இனிமே இது உங்கள் குடும்ப பிரச்சனை, நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லி கிளம்பி செல்ல ஊர் மக்களும் கலைந்து செல்கின்றனர்.