தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா லெட்டரை படித்த கார்த்திக், ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட, அபிராமி குறி கேட்கலாம் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Karthigai deepam serial
அதாவது ஐஸ்வர்யா ரூமுக்குள் அருணிடம் நான் எதுவும் பண்ணல, எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று பேச, சரி பார்த்துக்கலாம் என அருண் வாக்கு கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோரும் கோவிலுக்கு வர, அபிராமி சாமியாரிடம் சென்று சந்தித்து பரிகாரம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாமியார் எதிரே வருகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிறகு அவரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்க, அவர் ஓலைச்சுவடியில் இதற்கான பரிகாரம் இருக்கும் என்று படித்து பார்த்து செல்வதாக சொல்லி ஓலைச்சுவடியை எடுக்கிறார். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பூஜை ஒன்றை நடத்த வேண்டும்; அந்த பூஜையில் இறுதியில் பாம்பு ஒன்று வந்து சாமி விஷயத்தில் தவறு இழைத்தவரை கொத்தும் என சொல்ல அதைக் கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.
44
Karthigai deepam serial today episode
பிறகு மைதிலி மற்றும் மீனாட்சி இருவரும் ஐஸ்வர்யாவிடம் வந்து நீதான் தப்பு பண்ணி இருப்ப, எங்களுக்கு நல்லாவே தெரியும் உண்மையை ஒத்துக்க சமூகமா தீர்த்துவிடலாம் என்று சொல்ல, நான் எதுவும் தப்பு பண்ணல முடிந்தால் நிரூபித்துக் கொள்ளுங்கள் என சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி, இதிலிருந்து தப்பிக்க ஐடியா கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.