
'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நயன்தாராவை வைத்து 'நானும் ரவுடிதான்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிக்கும் போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும், இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இதை இதைத்தொடர்ந்து வெற்றிகரமாக 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாகவும் இருந்தது.
இந்நிலையில் 'நெற்றிக்கண்' படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, தொகுப்பாளர் டிடி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை காட்டி, அதில் அவர் அணிந்திருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அது தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரம் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் செய்திகள்: வாடகை தாய் விவகாரத்திற்கு புற்றுப்புள்ளி..! ஆதாரங்களை சமர்ப்பித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ரகசியமாக தன்னுடைய நிச்சயதார்த்தம் நடந்தாலும், திருமணம் அனைவருக்கும் அறிவித்து பிரமாண்டமாக நடைபெறும் என நயன்தாரா கூறி இருந்தார். எனவே விரைவில் நயன்தாரா திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
முதலில் திருப்பதியில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பின்னர் இவர்களுடைய திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாலும், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாகவும், மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கண்ணாடி மாளிகையில் இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. தங்களின் திருமணத்தை ஒரு திருவிழா போல் கொண்டாடிய நயன் - விக்கி இருவரும் தொடர்ந்து தங்களின் படபிடிப்புகளிலும் கவனம் செலுத்தி வந்தனர்.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் எடுக்கும் ஆர்வம் வந்தது எப்படி..? படம் உருவான விதம்... மனம் திறந்த மணிரத்னம்! வீடியோ
அதே போல் அவ்வப்போது ஹனி மூனுக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தனர். தற்போது நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்தனர்.
வாடகை தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் இவர்களை சுற்ற தொடங்கியது. அதாவது திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், அதேபோல் கணவன் - மனைவி, இருவரில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால் திருமணம் ஆன 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி இந்த முடிவெடுக்க காரணம் என்ன? இவர்கள் முறையாக நிபந்தனைகளை பின்பற்றி குழந்தை பெற்றுள்ளார்களா அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை மீறப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுந்தன.
மேலும் செய்திகள்: Biggboss Promo: ஜிபி முத்துவை நிற்க வைத்து கலாய்த்த கமல்..! பாதாம்மை காட்டியது தப்பா போச்சே..?
இந்த பிரச்னை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. மேலும் நயன் - விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள உதவிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் போது இருவரும் விசாரணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மியின் பிரமாண்ட லக்ஸூரி ஹவுஸ்..! பிரமிக்க வைத்த புகைப்படங்கள் இதோ!
6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவகாரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர் நயன் - விக்கி தம்பதி.