பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. கடந்த 5 சீசனில் இல்லாத அளவிற்கு சுமார் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். குறிப்பாக இதில் மிகவும் பிரபலமான சினிமா நடிகர் - நடிகைகள் இல்லை என்றாலும், சின்னத்திரையில் பிரபலமான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, மஹேஸ்வரி, ஆயிஷா, அமுதவாணன், குயின்சி போன்ற நடிகைகள் உள்ளனர். மேலும் வெள்ளித்திரையில் ஜொலிக்க நினைக்கும் மாடல், விஜே, கிரிக்கெட்டர், யூ டியூபர், டான்ஸ் மாஸ்டர், மற்றும் ட்ரான்ஸ் ஜெண்டர் போன்ற எதிர்பாராத போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.