வருங்கால மனைவியுடன் ஜொலிக்கும் ஹரிஷ் கல்யாண்...க்யூட் போட்டோஸ் இதோ

Published : Oct 15, 2022, 03:02 PM ISTUpdated : Oct 15, 2022, 03:19 PM IST

நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

PREV
18
வருங்கால மனைவியுடன் ஜொலிக்கும் ஹரிஷ் கல்யாண்...க்யூட் போட்டோஸ் இதோ

சிந்து சமவெளி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஹரிஷ் கல்யாண். அரிது அரிது, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் முதல் பட அறிமுகம் சரியான ஓப்பனிங்கை  கொடுக்கவில்லை. பின்னர் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்தார்.  அதில் ஜெய் ஸ்ரீ ராம் என்னும் படத்தில் நடித்தார்.

28
Harish Kalyan

பின்னர் மீண்டும் தமிழில் பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்களுக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைப்பது வழக்கம் தான்.

மேலும் செய்திகளுக்கு...ரச்சிதாவுக்கு நூல் விட்ட ராபர்ட்..ராமை காதலிக்கும் மகேஸ்வரி..கொளுத்தி போடும் பயில்வான்

38

அந்த வகையில் முதல் சீசனில் களமிறங்கிய ஹரிஷ் கல்யாண் தற்போது அறியப்பட்ட நாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார். வைல்ட்கார்ட்  போட்டியாளராக 52 வது நாளில் உள் நுழைந்த இவர் 98 நாட்கள் அங்கிருந்து இரண்டாவது ரன்னர் அப் வெற்றியாளரானார். 

48
harish kalyan

இதை அடுத்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 1 விருந்தினராகவும், பிக் பாஸ் தமிழ் சீசன் 2, ஜீன்ஸ்  சீசன் 3 உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோகளில் தோன்றியுள்ளார் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததோடு ரசிகர் பட்டாளத்தையும் பெற்று கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பிலும் கலக்கி வரும் ஐஸ்வர்யா லட்சுமி...அவரே சொன்ன சுவாரஸ்யம் இதோ

58
harish kalyan

அதன்படி இவர் நடிப்பில்  பியார் பிரேமா காதல் என்னும் படம் வெளியானது. இந்த படத்தில்  பிக் பாஸில் இடம் பெற்றிருந்த ரைசா வில்சன் நாயகியாக நடிக்க யுவன் சங்கர் ராஜா படத்தை தயாரித்திருந்தார். அடல்ட் லவ் கதைகளை கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

68
harish kalyan

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மண பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் இறுதியாக  ஓ மண பெண்ணே ஓடிடியில் வெளியாகி இருந்தது. தற்போது இவர் நடிப்பில் நூறு கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

78
harish kalyan

இதற்கிடையே  சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தினார் ஹாரிஸ்.  ஒரு பெண்ணின் கையை பிடித்தபடியே அவர் முதன்முதலில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். பின்னர் தனது காதலி இவர் தான். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என ரசிகைகளின் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்டார் ஹரிஷ் கல்யாண்.

88
harish kalyan

அவர் பெயர் நர்மதா உதயகுமார். ஐடி கம்பெனிகள் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

click me!

Recommended Stories