மலையாள திரையுலகில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஆக்சன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். விஷாலின் காதலி மீராவாக அடியெடுத்து வைத்த இவருக்கு ஜகமே தந்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
26
aishwarya lakshmi
இந்த படத்தையடுத்து புத்தம் புது காலை விடியாதா, கார்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதோடு சமீபத்தில் ஆர்யாவிற்கும் இவர் ஜோடியாக நடித்த கேப்டன் படம் வெளியாகி இருந்தது. படம் மிதமான வரவேற்பையே பெற்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் பூங்குழலி என்னும் ரோலில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. சமுத்திர குமரியாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். கடலில் பட கு ஓட்டும் பெண்ணாக கதையின் முக்கிய திருப்புமுனைக்கு காரணமாக இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
46
aishwarya lakshmi
இவரின் வேடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பாராட்டுகளை பெற்று வருகிறது. தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட பலமொழி படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தியில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் மம்முட்டிக்கு மகளாக ஒருப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பரிமாணித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. அதன்படி கார்கி படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய ரோலில் நடந்தார். தந்தையை காப்பாற்ற போராடும் மகளாக நடித்திருந்தார். இவரது நடிப்பு பாராட்டிற்குள்ளான வேளையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
66
aishwarya lakshmi
இதை தொடர்ந்து தற்போது குமாரி என்னும் மலையாள படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய வேடத்திலும் இவர் நடிக்கிறார். புராண இதிகாசம் தொடர்பான திரில்லர் கதையாக இது இருக்கும் என்றும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.