4 மாத திருமண பந்தத்தில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் திடீரென இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டோம் என்கிற பதிவை வெளியிட்டு இருந்தனர். குழந்தைகளின் பாதத்துடன் இவர்கள் வெளியிட்டிருந்த பதிவில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தை தாயாகியுள்ள விஷயத்தை கூறியிருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதோடு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்த கேள்விகளும் எழுத்தது.