நயன்தாராவின் காதல் முதல் குழந்தை வரை பல சர்ச்சைகள் எழுந்து விட்டன. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் 7 ஆண்டு காதலுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். இவர்கள் முன்னதாகவே லிவ்விங் டு கெதரின் வாழ்ந்து வந்தனர் என கூறப்படுகிறது. இந்த முறை இந்தியாவில் இதுவரை சட்டபூர்வமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடிதான் என்னும் படத்தில் மலர்ந்த காதல் தற்போது திருமணமாக மாறியுள்ளது. இவர்கள் அவ்வப்போது கோயில் குளங்களுக்கு செல்லும் புகைப்படங்களும் முன்னதாக வைரலாகி வந்தன.
இதையடுத்து நடிகர் பட்டாளம் சூழ நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஹனிமூன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தை நிரப்பி வந்தது. இறுதியாக நயன்தாரா, சமந்தா ,விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த படமும் நல்ல வசூலையே வாரி கொடுத்தது. பின்னர் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மணவறையில் இவர்களது மண வாழ்க்கை துவங்கியது. திருமணமான நான்கு மாதங்களில் இந்த ஜோடியின் புகைப்படங்கள் வெளியாக நாளே இல்லை என்று கூட சொல்லலாம்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்
இந்நிலையில் திடீரென இருவரும் தாங்கள் தாய் தந்தையாகிவிட்டதாக கூறி குழந்தைகளின் பாதங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்துள்ளதாகவும் கூறியிருந்தனர். இதனால் ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு வாடகைக்கு தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து பல கேள்விகளும் எழும்பி வந்தது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளது. அதாவது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு கட்டாயம் குழந்தை பேரு இருக்கக்கூடாது. முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் இதில் எதை நயன்தாரா விக்னேஷ் சிவன் பாலோ செய்தார்கள் என்பது தெரியவரவில்லை.
இதையடுத்து அரசு சார்பில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. iஇவரது விஷயத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து கிளம்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..வரலாற்று மர்மம் நந்திவர்மன்...விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் இதோ
இந்தப் படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தையும் தயாரித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் சூட் செய்யப்பட உள்ளதாம். இதற்காக 20 நாட்கள் ராஜஸ்தான் புறப்படுகிறார் நயன்தாரா. வாடகை தாய் பிரச்சனை தீப்பற்றி எரியும் நேரத்தில் நயன்தாரா இங்கிருந்து கிளம்புவது கேள்வியை எழுப்பியுள்ளது.