தனுஷும்.. சிம்புவும்...ஒரே படத்திலா? வெற்றிமாறனின் சூப்பர் பிளான்

First Published | Oct 15, 2022, 7:42 AM IST

சிம்பு தனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

vetrimaaran

தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சூரி நாயகனாக அறிமுகமாகவும் இந்த படம் பல வருடங்களாக படப்பிடிப்பிலேயே இருக்கிறது. தற்போது திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை என்கிற இடத்தில் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று  வருகிறது. சூரி இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அதோடு விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

vetrimaaran

மலைவாழ் மக்களுக்கும் போலீசுக்கும் இடையேயான கதைக்களத்தை இந்த படம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் என்றாலே அவரது தனித்துவமான பாணி தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும். இவரது டெடிகேஷன் பல விருதுகளை குவித்துள்ளது.  அதிலும்  தனுஷ் கூட்டணியில் உருவான பல படங்களும் வெற்றி கண்டுள்ளது. முதன் முதலில் தனுஷின் ஹிட் படங்களில் ஒன்றான பொல்லாதவன் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் வெற்றிமாறன்.

மேலும் செய்திகளுக்கு..வரலாற்று மர்மம் நந்திவர்மன்...விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் இதோ

Tap to resize

vetrimaaran

தனுஷுடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனது நண்பனின் அனுபவத்தை கொண்டு பொல்லாதவன் என்னும் படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன். அப்போது இரண்டு படங்களை ஒன்றாக இயக்கினால் ஒன்று தோல்வி அடைந்தாலும், ஒன்று வெற்றி பெற்று விடும் என தனுசும் வெற்றிமாறனும் பிளான் செய்துள்ளனர். அதன்படி முதலில் நெடுஞ்சாலையை துவங்கியுள்ளனர். ஆனால் இந்த படம் பாதியிலேயே நின்று போனது இதை அடுத்து தான் பொல்லாதவன் என்கிற படம் உருவாகியது. 

இந்த படம் ஹிட் அடித்ததை அடுத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்கள் வெளியானது. இதில் அசுரன் படம் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. அதோடு இவர்கள் கூட்டணியில் உருவான காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பை தேடித் தந்தது. இதன்பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக மாறிவிட்டார். இவர் இயக்கத்தில் பல பாலிவுட் நடிகர்களும், டோலிவுட் நடிகர்களும் கூட நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த அளவிற்கு இவரது புகழ் தென்னிந்தியா முழுவதும் பரவி கிடைக்கிறது. 

velraj- vetrimaaran

தற்போது விடுதலையை அடுத்து சூர்யாவின் வாடிவாசலுக்கு தயாராகி வருகிறார் இயக்குனர். இந்த நிலையில் வடசென்னை படம் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது பொல்லாதவன் திரைப்படத்தை அடுத்து வடசென்னை திரைப்படத்தை நடிகர் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக தனுஷிடம் கூறியுள்ளார் வெற்றி மாறன். ஆனால் அந்த கனவு பலிக்கவில்லையாம்.

மேலும் செய்திகளுக்கு...வாரிசு படத்தில் காத்திருக்கும் மாஸ்...கெத்துக்காட்டும் நடன இயக்குனர் ஜானி

ameer sultan vetrimaaran movie

அதாவது வடசென்னை படத்தில் இருக்கும் ராஜன் என்கிற கதாபாத்திரத்திற்கு சிம்புவை சூஸ் செய்துள்ளார் வெற்றிமாறன். இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் குமார் என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்ததாம். 40 நிமிடங்கள் வரக்கூடிய இந்த கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவரின் இறப்பு குறித்து தான் படத்தின் கதை சுழலும்.  ஆனால் சிம்பு தனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!