வழவழப்பான தங்க நிற உடையில்... பாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வரியா ராஜேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்!

First Published | Oct 14, 2022, 6:43 PM IST

விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
 

சின்னத்திரை-யில் அறிமுகமானவர்கள் வெள்ளித்திரையில், நிலையான இடத்தை பிடிக்க முடியும் என நிரூபித்து காட்டியவர் டார்க் ஸ்கின் அழகி ஐஸ்வர்யா ராஜேஷ் தான். சின்னத்திரையில் பிரபல நடன நிகழ்ச்சியில் அறிமுகமான இவர், நிலையான நடிகை என்கிற இடத்தை பிடிக்க பட்ட கஷ்டங்களும், கடந்து வந்த போராட்டங்களும் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
 

குறிப்பாக கதாநாயகிகள் சிலர், ஏற்று நடிக்க மறுத்த கதாபாத்திரமான... 'காக்கா முட்டை' படத்தில் இடம்பெற்ற அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் பதிந்தார். 

மேலும் செய்திகள்: GP Muthu: பிரபல கிரிக்கெட் வீரரின் படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து..! வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
 

Tap to resize

பல நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தால் தங்களின், கேரியர் பாதிக்கப்படும் என அச்சப்படும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்ததே... இவர் அம்மா வேடத்தில் நடித்த 'காக்கா முட்டை' திரைப்படம் தான்.

எப்படி பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னையே வருத்தி கொண்டு நடித்து, கெத்து காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,  'கனா' படத்திற்கு பின்னர், கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: Jailer Movie: கடலூரில் மாஸ் காட்டிய தலைவர்..! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்..!
 

அந்த வகையில் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஹீரோயின் சப்ஜெட் படங்களே இவரது லிஸ்டில் அதிகம் உள்ளது. மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வழவழப்பான தங்க நிற உடையில்... எடுத்துக்கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்: நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22 படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை மற்றும் 2 முன்னணி நடிகர்கள்!
 

Latest Videos

click me!