திருநெல்வேலி அருகே "வேட்டையன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த போது தான் அவருடைய நண்பரும், பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார். கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அவர் காலமான நிலையில், அந்த தகவல் அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாக தன்னுடைய வேட்டையன் திரைப்பட பணிகளை நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார். அடுத்த நாள் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து கண்ணீர் மல்க அவர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் மணிகண்டனை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் ஞானவேல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அவருடைய மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மூன்றாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நடிகரை இயக்கியுள்ள ஞானவேல், கமர்ஷியல் ரீதியாகவும் கன்டென்ட் ரீதியாகவும் வேட்டையன் திரைப்படத்தை எடுத்திருப்பதாக அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் தமிழ் திரையுலகத்திற்கு முதல் முறையாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை அறிமுகம் செய்த பெருமை ஞானவேலை இந்த படத்தின் மூலம் சேர்ந்திருக்கிறது.