
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோட்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இதுவரை சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், ஓடிடிக்கு இப்படம் பார்சல் ஆன பின்னரும், தமிழகத்தில் உள்ள, சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 'கோட்' படம் 1000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்த்த ரசிகர்கள் கனவு நிறைவேறாவிட்டாலும்... தளபதி தன்னுடைய 69 படத்தில் கண்டிப்பாக 1000 கோடி வசூல் சாதனையை புரிவார் என அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
'கோட்' படத்தின் ரிலீசுக்கு பின்னர், தளபதி தன்னுடைய கட்சி பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தடபுடலாக தயாராகி உள்ளார். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 69 வது திரைப்படத்தின் பட பூஜை, மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையேடு உணர்வு பூர்வமாக நன்றி கூறிய ரஜினிகாந்த்!
ஏற்கனவே இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். குறிப்பாக நடிகர் அஜித் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் எப்படி தொடர்ந்து நடித்தாரோ, அதே போல் எச் வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
ரசிகர்கள் பலரும் எச் வினோத் மற்றும் தளபதி விஜய் காம்போ எப்போது இணையும் என எதிர்பார்த்த நிலையில், அவர்களுடைய கனவை நிறைவேற்றும் விதமாக தற்போது விஜய் மற்றும் எச் வினோத் காம்போவில், 'தளபதி 69' படம் உருவாக உள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்களையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை மிகவும் எளிமையான முறையில் போடப்பட்டுள்ளது. தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக விஜய்க்கு சுமார் 275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களிலேயே, அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் தளபதி 69 படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர நமீதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். கூடிய விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிமையாக நடந்தாலும் அதில் ஒட்டு மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். தளபதி வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.