மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையேடு உணர்வு பூர்வமாக நன்றி கூறிய ரஜினிகாந்த்!

First Published | Oct 4, 2024, 5:11 PM IST

நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலத்துடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை கூறியுள்ளார்.
 

Super Star Rajinikanth

கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி காலை 6 மணி அளவில் அப்பல்லோவின் இருதய நோய் மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு, சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் ரெட்டி மற்றும் நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோரும் ரஜினிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். 

Super Star Rajinikanth

ரஜினிக்கு, திடீர் என சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் அடி வயிறு வீங்கி வலி ஏற்பட்டது. ரஜினிகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் தற்போது அவருக்கு மைனர் சர்ஜரி மூலம் அடிவயிற்றில் ஸ்டன்ட் ஒன்று , ஸ்டன்ட் ஒன்றை பொருத்தினர். மேலேயும் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் இருந்த வீக்கம் சர்ஜரி இல்லாமல் Transcatheter என்று முறைப்படி முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது". என்றும் சிகிச்சைக்கு பின்னர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது.

அட்ரா சக்க... 2 வருடத்திற்கு பின் சூப்பர் ஹிட் சீரியலை தூசு தட்டி 2 பாகத்திற்கு பிளான் போட்ட ஜீ தமிழ்!

Tap to resize

Coolie Movie:

இந்நிலையில், பூரண உடல் நலத்துடன் ரஜினிகாந்த், இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் நிம்மதி அடைந்தது. ரஜினிகாந்தின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்  மூன்று வாரம் கண்டிப்பாக ஓய்வில் இருக்க வேண்டும் என அறிந்திருக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.   
 

Rajinikanth Statement

மேலும் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், என பலர்  தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய நிலையில்...  தற்போது டிஸ்சார்ஜ் ஆன கையோடு உணர்வுபூர்வமாக தன்னுடைய நன்றிகளை அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,"நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையைச் சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனை செய்து மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Latest Videos

click me!