இந்த சூப்பர் ஹிட் லவ் சாங்ஸ் எல்லாம் பக்தி பாடல்களை காப்பியடித்து போடப்பட்டதா? இதுல இளையராஜா பாட்டும் இருக்கு!

Published : Oct 04, 2024, 02:34 PM IST

இளையராஜா, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பிரபல இசையமைப்பாளர்கள் பலர் பக்த் பாடல்களுக்கு போடப்பட்ட ட்யூனை காப்பியடித்து காதல் பாட்டை உருவாக்கி இருக்கிறார்கள்.

PREV
15
இந்த சூப்பர் ஹிட் லவ் சாங்ஸ் எல்லாம் பக்தி பாடல்களை காப்பியடித்து போடப்பட்டதா? இதுல இளையராஜா பாட்டும் இருக்கு!
Tamil Copied songs

தமிழ் சினிமாவில் ஒரு பாடலை தழுவி மற்றொரு பாடல் உருவான கதை ஏராளம். அதில் பக்திப் பாடல்கள் சிலவற்றிற்காக போட்ட ட்யூனை காப்பியடித்து இசையமைப்பாளர்கள் உருவாக்கிய காதல் பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அந்த வரிசையில் முதன்மையில் இருப்பவர் இசையமைப்பாளர் தேவா. இவர் கந்தசஸ்டி கவசத்துக்காக போட்ட டியூனை அப்படியே காப்பியடித்து சரத்குமாரின் சூரியன் படத்தில் பயன்படுத்தி இருப்பார்.

25
18 vayathu ila mottu song

18 வயது இளமொட்டு மனது என்கிற அந்தப் பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வேண்டுமென்றே தான் கந்தசஸ்டி கவசத்தில் இருந்து எடுத்தாராம் தேவா. படத்தில் இந்த பாடல் காட்சி வரும் முன், நாயகி கந்தசஸ்டி கவசம் கேட்டுக் கொண்டிருப்பாராம். அதில் இருந்து பாடல் தொடங்க வேண்டும் என இயக்குன சிசுவேஷன் சொன்னதால் தான் கந்தசஸ்டி கவசம் ட்யூனை போட்டிருக்கிறார் தேவா. ஆனால் படத்தில் அந்த சீனை தூக்கிவிட்டதால் தேவா இப்பாடலை காப்பியடித்து போட்டதாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஒரு ஊரே சேர்ந்து பாடிய பாட்டு! விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் உருவான கதை தெரியுமா?

35
Maanguyile Poonguyile Song

இசைஞானி இளையராஜா ஒரு பக்தி பாடலை காதல் பாடலாக மாற்றி இருக்கிறார். அவர் இசையமைத்து பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆன கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெறும் மாங்குயிலே பூங்குயிலே பாடலை, ஏறுமயிலேறு என்கிற முருகன் பாடல் டியூனை வைத்து உருவாக்கி இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஏறுமயிலேறு என்கிற முருகன் பாடலுக்கு இசையமைத்ததும் நம் இளையராஜா தான். அவரே தன் ட்யூனை இரண்டு பாடல்களுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.

45
karuppana kaiyale song

அதேபோல் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே கனகவல்லி பாடல் ட்யூனை காப்பியடித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தாமிரபரணி படத்தில் பயன்படுத்தி இருந்தார். அப்படத்தில் இடம்பெறும் கருப்பான கையால பாடலும் கற்பூர நாயகியே கனகவல்லி என்கிற பக்தி பாடலும் ஒரே சாயலில் இருக்கும்.

55
chennai senthamil Song

தந்தைக்கு போட்டியாக இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் ஒரு பக்தி பாடலை பட்டி டிங்கரிங் பார்த்து லவ் சாங் ஆக உருவாக்கி இருக்கிறார். ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் இடம்பெறும் சென்னை செந்தமிழ் என்கிற பாடல் ஷங்கர் மகாதேவன் பாடிய மஹா கணபதி என்கிற பாடலின் காப்பி ஆகும்.

இதையும் படியுங்கள்...   அட்ரா சக்க... 2 வருடத்திற்கு பின் சூப்பர் ஹிட் சீரியலை தூசு தட்டி 2 பாகத்திற்கு பிளான் போட்ட ஜீ தமிழ்!

Read more Photos on
click me!

Recommended Stories