அட்ரா சக்க... 2 வருடத்திற்கு பின் சூப்பர் ஹிட் சீரியலை தூசு தட்டி 2 பாகத்திற்கு பிளான் போட்ட ஜீ தமிழ்!

First Published | Oct 4, 2024, 2:24 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கடந்த 2 வருடங்களுக்கு முன் நிறைவடைந்த சூப்பர் ஹிட் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Serial Update

சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு அடுத்தபடியாக... ஏராளமான இளவட்ட ரசிகர்களாலும், இல்லத்தரசிகளாலும் பார்த்து ரசிக்கப்படுவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான். சமீப காலமாக TRPயில் தொடர்ந்து டாப் 10 பாட்டிலுக்குள் இடம்பிடிக்க முடியாமல், தவித்து வரும் ஜீ தமிழ் கூடிய விரைவில் சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
 

Sembaruthi Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 -ஆம் ஆண்டு முதல் 2022-வரை தொடர்ந்து 5 வருடங்கள் ஒளிபரப்பான சீரியல் 'செம்பருத்தி'. இந்த தொடரை ராம் குமாரதாஸ் என்பவர் ஆரம்பத்தில் இயக்கி வந்த நிலையில், பின்னர் சுலைமான் கே பாபு, நீராவி பாண்டியன், ஷங்கர், மஞ்சுநாதன், உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து இயக்கினர். இந்த தொடரில் கார்த்திக் ராஜ் சுமார் 1000 எபிசோடுகள் வரை ஹீரோவாக நடித்து வந்த நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார்.

நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Tap to resize

Shabhana

அவருக்கு பதில் விஜே அக்னி நடிக்க துவங்கினார். ஹீரோயினாக ஷபானா ஷாஜஹான் நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் ப்ரியா ராமன் நடித்தார். இந்த தொடர் குறுகிய நாட்களிலேயே டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடித்தது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், தற்போது கார்த்திக் ராஜ் நடித்து வரும் கார்த்திகை தீபம், அண்ணா, போன்ற சீரியல்கள் டாப் 20 இடங்களுக்குள் வந்தாலும் டாப் 10 இடத்தை கைப்பற்றுவது அரிதாகவே உள்ளது.
 

Sembaruthi part 2

இந்நிலையில், சீரியல் ரசிகர்களை கவரும் விதமாக 'செம்பருத்தி' சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப ஜீ தமிழ் தொலைக்காட்சி முடிவெடுத்துள்ளதாம். இந்த சீரியல்... கார்த்திக் ராஜ் ஹீரோவாகவும், ஷபானா ஹீரோயினாகும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர... முதல் சீசனில் நடித்த பல நடிகர்கள் இந்த சீசனில் நடிப்பார்கள் என்றும், கூடிய விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் செம்பருத்தி சீரியலை மிஸ் பண்ணாமல் பார்த்து வந்த சீரியல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் வருகையால் அதிரடியாக மாற்றப்படும் 5 விஜய் டிவி சீரியல் டைமிங்!

Latest Videos

click me!