ஒரு ஊரே சேர்ந்து பாடிய பாட்டு! விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் உருவான கதை தெரியுமா?

Published : Oct 04, 2024, 01:18 PM IST

லப்பர் பந்து படத்தின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி வரும் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் உருவான கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
ஒரு ஊரே சேர்ந்து பாடிய பாட்டு! விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் உருவான கதை தெரியுமா?
Attakathi Dinesh, Vijayakanth

தமிழ் சினிமாவில் தற்போது வரும் நிறைய படங்களில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்துவது டிரெண்ட் ஆகி வருகிறது. அதுவும் அந்த பாடல்கள் அப்படத்தின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன. உதாரணத்திற்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாட்டு, கைதி படத்தில் வரும் ஆச அதிகம் வச்சு பாடல், வாழை படத்தில் இடம்பெற்ற மஞ்சள் பூசும் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

24
Lubber pandhu

அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் தான் லப்பர் பந்து. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் தான் தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டையகிளப்பி வருகிறது. இந்தப் பாடல் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பொன்மனச் செல்வன் என்கிற திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடலாகும். இப்பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதி இருந்தார். விஜயகாந்தின் இண்ட்ரோ பாடலாக இது படத்தில் இடம்பெற்று இருந்தது.

இதையும் படியுங்கள்... டிரெண்டாகும் தளபதி விஜய்யின் கோட் மோதிரம் - யார் பரிசளித்தது தெரியுமா?

34
Ponmanaselvan

பி வாசு இப்படத்தை இயக்கி இருந்தார். ஒரு சாராயக் கடையை வில்லன் கும்பல் திறக்க வருகிறது. அப்போது ஜெமினி கணேசன், விகே ராமசாமி ஆகியோர் ஊர் மக்களோடு சேர்ந்து அதை எதிர்த்து போராடுகின்றனர். அந்த போராட்டக்காரர்களை எல்லாம் வில்லன் கும்பல் அடிச்சு விரட்டுகிறது. அப்போது எண்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த், வில்லன்களை பந்தாடி, அந்த சாராயக் கடை திறப்புக்கு முட்டுக்கட்டை போடுகிறார். வில்லன்களுடன் சண்டையிட்டு முடித்ததும் வரும் பாட்டு தான் நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல்.

44
Nee Pottu Vacha Thanga Kudam song secret

ஒரு ஊரே கேப்டன் விஜயகாந்தை பார்த்து பாராட்டி பாடும்படியான பாடலாக இது படத்தில் இடம்பெற்று இருக்கும். இந்த பாடலை படமாக்கும் போதே மிகவும் என்ஜாய் பண்ணி ஷூட் பண்ணினாராம் இயக்குனர் பி வாசு. கங்கை அமரனுக்கும் விஜயகாந்தை மிகவும் பிடிக்குமாம், அதனால் விஜயகாந்தை புகழும் படி இந்த பாடல் வரிகளை டபுள் மடங்கு சந்தோஷத்தோடு எழுதிக் கொடுத்திருக்கிறார். விஜயகாந்த் மறைந்த பின்பும் லப்பர் பந்து படம் மூலம் மீண்டும் டிரெண்டாகி இருக்கும் இந்த பாடல் அடுத்த வருடம் நடக்கும் ஐபிஎல்லில் தோனியின் எண்ட்ரி சாங் ஆக நிச்சயம் இடம்பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதையும் படியுங்கள்... லப்பர் பந்து பாணியில் நயன்தாரா நடிச்ச கிரிக்கெட் படம்! நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories