டிரெண்டாகும் தளபதி விஜய்யின் கோட் மோதிரம் - யார் பரிசளித்தது தெரியுமா?

First Published | Oct 4, 2024, 11:55 AM IST

கோட் படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற நிலையில், நடிகர் விஜய் கையில் கோட் என எழுதப்பட்ட புது மோதிரத்தை அணிருந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Vijay GOAT ring

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இதில் விஜய்யுடன் சினேகா, லைலா, மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி, வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். 

Thalapathy 69

கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் உலகளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார்.

இதையும் படியுங்கள்...என்ன செல்லம் ரெடியா? தளபதி 69.. மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - வினோத் கொடுத்த இரட்டை அப்டேட்!

Tap to resize

Thalapathy 69 Cast and Crew

விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது கேவிஎன் நிறுவனம். அந்நிறுவனம் தற்போது யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தையும் தயாரிக்கிறது. தமிழில் அவர்கள் தயாரிக்கும் முதல் படம் தளபதி 69 தான். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.

Thalapathy VIjay New GOAT Ring

தளபதி 69 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இதன் பூஜையில் நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பூஜையின் போது நடிகர் விஜய்க்கு மோதிரம் ஒன்றும் பரிசாக கிடைத்திருக்கிறது. கோட் பட வெற்றிக்காக அந்த மோதிரத்தை தயாரிப்பாளர் டி சிவா, விஜய்க்கு பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கோட் படத்தில் விஜய்யுடன் நடித்தும் இருந்தார். கோட் என எழுதப்பட்ட அந்த மோதிரத்தை அணிந்தபடி நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... லப்பர் பந்து பாணியில் நயன்தாரா நடிச்ச கிரிக்கெட் படம்! நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிறது

Latest Videos

click me!