விஜய்யை விட 150 கோடி கம்மி சம்பளம் வாங்கிய ரஜினி! வேட்டையன் பட நடிகர்களின் சம்பள விவரம் இதோ

First Published | Oct 4, 2024, 9:43 AM IST

Rajinikanth Salary for Vettaiyan : த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Rajini, Fahadh Faasil, Amitabh Bachchan

ஜெய் பீம் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

Rajinikanth, Manju warrier

மேலும் பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்! கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது?

Tap to resize

Rajinikanth Salary for Vettaiyan

அதன்படி வேட்டையன் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.125 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். கடைசியாக அவர் நடித்த ஜெயிலர் படத்துக்காக ரஜினிக்கு ரூ.110 கோடி சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், வேட்டையன் படத்துக்கு அதைவிட ரூ.15 கோடி கூடுதலாக வாங்கி இருக்கிறார் ரஜினி. ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ரூ.110 கோடி சம்பளம் வழங்கப்பட்டது மட்டுமின்றி படத்தின் லாபத்தில் இருந்து ரூ.100 கோடி ஷேரும் வழங்கப்பட்டது.

Manju warrier Salary

நடிகர் விஜய்யோடு ஒப்பிடுகையில் ரஜினிக்கு மிகவும் கம்மியான தொகையே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்துக்காக ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி உள்ள நிலையில், அவரைவிட 150 கோடி கம்மியாக சம்பளம் வாங்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

Vettaiyan movie cast and Crew Salary

ரஜினியை தொடர்ந்து வேட்டையன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியருக்கு ரூ.2 முதல் 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அதேபோல் நடிகர் பகத் பாசிலுக்கு ரூ.4 கோடியும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் ரூ.7 கோடியும், ராணா டகுபதி ரூ.5 கோடியும், நடிகை ரித்திகா சிங்கிற்கு ரூ.25 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வருகையால் அதிரடியாக மாற்றப்படும் 5 விஜய் டிவி சீரியல் டைமிங்!

Latest Videos

click me!