மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்! கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது?

First Published | Oct 4, 2024, 7:46 AM IST

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

SuperStar Rajinikanth

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 30-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அன்று நள்ளிரவி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். தலைவருக்கு என்ன ஆனதோ என ரசிகர்கள் பதறிப்போன நிலையில், அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அக்டோபர் 1-ந் தேதி காலை இதயவியல் நிபுணர் சாய் சதீஷ் தலைமையிலான குழு ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தது.

Rajinikanth

அதில் ரஜினிகாந்தின் அடிவயிற்றில் ஏற்பட்ட வீக்கத்தை போக்க ஸ்டெண்ட் வைத்துள்ளனர். அதன்பின் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை சீரானதை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நேற்று இரவு ரஜினியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினர். நேற்று இரவு 11 மணியளவில் ரஜினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதையும் படியுங்கள்... "அவங்க நடிச்சா நான் நடிக்க மாட்டேன்" ரஜினி படத்தில் பிரச்சனை பண்ண நயன்தாரா? உண்மையை உடைத்த நடிகை!

Tap to resize

Rajinikanth health

குடும்பத்தினருடன் வீடு திரும்பிய ரஜினியை காண மருத்துவமனை வாயிலில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி காரில் கிளம்பி சென்றார் சூப்பர்ஸ்டார். ரஜினிகாந்த் குணமாகி வீடு திரும்பினாலும் அவரால் ஷூட்டிங்கில் தற்போதைக்கு பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. ரஜினிகாந்தை சுமார் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம். இதனால் இம்மாத இறுதி வரை அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

Rajinikanth Discharged

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்டபோது தான் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினி இல்லாவிட்டாலும் இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறாராம் லோகி. இதுதவிர வருகிற அக்டோபர் 10ந் தேதி ரஜினி நடித்த வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என்ன செல்லம் ரெடியா? தளபதி 69.. மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - வினோத் கொடுத்த இரட்டை அப்டேட்!

Latest Videos

click me!