தளபதி விஜயின் இந்த இறுதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைக்கிறது பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், தளபதி விஜய் உடன் "பீஸ்ட்" திரைப்படத்தில் நடித்து அசத்திய பிரபல நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.