சிவாவின் புறநானூறு.. வெளியேறிய லோக்கி - என்ட்ரி கொடுக்கும் "நயன்தாராவின் தம்பி"!
Sivakarthikeyan : பிரபல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள "புறநானூறு" என்று திரைப்படத்தில் நடிக்க உள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan : பிரபல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள "புறநானூறு" என்று திரைப்படத்தில் நடிக்க உள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் பயணித்து வந்த போதே இவருடைய பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றால் அதில் நிச்சயம் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆழ விதைத்தார் சிவகார்த்திகேயன்.
இந்த சூழலில் தான் "மெரினா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய மனிதனாக வளர்ந்து இருப்பது அவருடைய திறமைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
சௌந்தர்யாவின் 100 கோடி ரூபாய் சொத்து... மோகன் பாபுக்கு சொந்தமானது எப்படி?
வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அவருடைய நடிப்பில் "அமரன்" என்கின்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி அவருடைய மனைவியாக நடித்திருக்கிறார். மேஜர் முகுந்தன் என்பவருடைய வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. "ரங்கூன்" என்ற திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
மேலும் முதல் முறையாக பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" திரைப்படத்தை இயக்கிய பிறகு, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராக களமிறங்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இயக்குனர் சுதா கொங்காராவுடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் அண்மையில் வெளியானது.
அதாவது ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவை வைத்து "சூரரை போற்று" என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த சுதா கொங்கரா, "புறநானூறு" என்கின்ற திரைப்படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், தற்போது அப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் முதல் முறையாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீ லீலா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் அவருடைய சகோதரராக இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் முரளியின் மகனும் சிறந்த தமிழ் திரை உலக நடிகருமான அதர்வா முரளி நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் அதர்வா கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டு விழா" ஆர்.கே. செல்வமணி வெளியிட்ட கலக்கல் தகவல்!