முன்னாள் நடிகரும், தற்போது தமிழகத்தின் அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது சினிமா வாழ்க்கைக்கு பிறகு தான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக களம் இறங்கினார்.
பிரபல "ரெட் ஜெயன்ட் மூவிஸ்" அந்த திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக "ஆதவன்", "மன்மதன் அன்பு", "ஏழாம் அறிவு", "நீர் பறவை", "வணக்கம் சென்னை" மற்றும் "இந்தியன் 2" ஆகிய ஏழு திரைப்படங்களை இதுவரை அவர் தயாரித்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் கடந்த 2010ம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வெளியான சிவக்கார்த்திகேயனின் "மாவீரன்" வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராகவும் செயல்பட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இளையராஜாவை அழவைத்த வாலி; எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் இந்த சூப்பர்ஹிட் பாட்டு தான்!!