"என் கஷ்டத்தை படத்தில் கூற விரும்பவில்லை" லப்பர் பந்து இயக்குனர் நச் டாக் - மாரி செல்வராஜை தாக்கினாரா?

First Published Oct 3, 2024, 7:24 PM IST

Director Tamizharasan Pachamuthu : அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Tamizharasan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மெல்ல மெல்ல வளர்ந்து வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி, இப்போது வரை மிகப் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வரும் திரைப்படம் தான் "லப்பர் பந்து". "அன்பு" என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண் என்றால் அது மிகையல்ல. 

அதேபோல லப்பர் பந்து படத்தில் "கெத்து" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தான் எப்பவுமே ஒரு மல்டி டேலண்டெட் நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் "அட்டகத்தி" தினேஷ் என்றே கூறலாம். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு ஏற்கனவே தமிழ் திரையுலகில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும், இந்த லப்பர் பந்து திரைப்படம் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதையின் எடுக்கப்பட்டுள்ளது.

வாலி முதல் ... நா.முத்துகுமார் வரை; அபூர்வ பறவையின் பெயரை 10 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர்கள்!

Lubber Pandhu

மேலும் லப்பர் பந்து படம் தற்பொழுது மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. பிரபல நடிகை சுவாசிக்கா மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காலி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் தங்களுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் டி.எஸ்.கே என்று அழைக்கப்படும் திருச்சி சரவணக்குமார் உண்மையில் பலரும் பாராட்டும் வண்ணம் தனக்கு கொடுக்கப்பட்ட வெங்கடேஷ் என்கின்ற கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார்.

Latest Videos


Dinesh

நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு பிரேக்கிக் பாய்ண்டாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வளவு அழகிய படத்தை மிக குறைந்த பட்ஜெட்டில் கொடுத்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இந்த திரைப்படம் இந்திய அளவில் சுமார் 330 மடங்கு அளவிற்கு வசூல் சாதனை படைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சுமார் ஐந்து முதல் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது.

Tamilarasan Pachamuthu

விரைவில் இந்த திரைப்படம் OTT தளத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்த ஒரு நேர்காணல் சில சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் "என் வாழ்க்கையில் போராட்டங்கள் இருந்தன. ஆனால் அதெல்லாம் என்னுடைய படத்தை பார்க்கும் ரசிகர்களிடம் நான் கூற விரும்பவில்லை. அந்த போராட்டங்கள் எல்லாவற்றையும் நான் பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காகத்தான் செய்தேன். ஏதோ நாட்டுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ நான் அதை செய்யவில்லை. நான் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்று சொல்வது எனக்கு பிடிக்காத ஒன்று" என்று கூறியிருக்கிறார்.

அவர் பொதுவாக பேசிய அந்த கருத்துக்களை, இயக்குனர் பச்சமுத்து இயக்குனர் மாரி செல்வராஜை மையப்படுத்தி தான் பேசியுள்ளார் என்று இணையவாசிகள் கிளப்பிவிட்டு வருகின்றனர். மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை தான் படமாக எடுத்து வருவதாக பல மேடைகளில் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

17 மொழிகளை பயன்படுத்தி; விஜய் படத்துக்காக மதன் கார்க்கி எழுதிய ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

click me!