தமிழ் திரைப்படங்களில் "ஐயா" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வந்து கொண்டிருக்கும் மாபெரும் நடிகை தான் நயன்தாரா. தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு படத்திற்கு சுமார் பத்து முதல் 12 கோடி ரூபாய் வரை இவர் சம்பளமாக வாங்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி, இந்த 19 ஆண்டுகளில் அவருடைய வளர்ச்சி என்பது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்றே கூறலாம்.
ஆனால் அவருடைய இந்த திரையுலக பயணத்தில் பலமுறை சர்ச்சைகளையும் எதிர்கொண்டு இருக்கிறார் நயன்தாரா. முதல் முதலில் திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா உடன் தான் கிசுகிசுக்களில் அடிபட தொடங்கினார் நயன்தாரா. ஒரு கட்டத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக பிரபுதேவா பழகி வருவதன் காரணமாக, அது பிரபுதேவாவின் மனைவிக்கு மிகப்பெரிய பிரச்சனையானது என்றும். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய முதல் மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்ய காரணமே நயன்தாரா என்றும் பல செய்திகள் அப்பொழுது வெளியானது.
விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்! என்ன ஆச்சு?