ஹாலிவுட் உள்பட 14 மொழி படங்கள்.. காமெடியில் சக்க போடு போட்ட ஒரே தமிழ் நடிகர் - யாருப்பா அவரு?

First Published | Oct 3, 2024, 4:36 PM IST

Kollywood Comedy Actor : தமிழ் திரை உலகில் தனது கலை பயணத்தை ஆரம்பித்து, ஆங்கிலம் உள்பட 14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஒரு காமெடி நடிகர்.

Goundamani

தமிழ் திரையுலகை பொருத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காமெடி நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற டாப் நடிகர்கள் கூட, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற காமெடி நடிகர்களின் கால் சீட்டுக்காக காத்திருந்த காலங்கள் உண்டு. இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவுக்கும் அதே அளவிலான வரவேற்பு இருக்கிறது. 

தளபதி விஜய் கூட ஒரு மேடையில், யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக நான் காத்திருந்தது எனக்கு பெருமையாக இருந்தது என்று கூறி பேசியிருக்கிறார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகரைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

அதிகபட்சமே 70 லட்சம் தான்! லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா!

Omakuchi narasimhan Family

நரசிம்மன் என்று சொன்னால் பலருக்கும் சட்டென்று புலப்படாது, ஆனால் "ஓமக்குச்சி" நரசிம்மன் என்றால் நம்மில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். கும்பகோணத்தில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்த இவர். சிறு வயது முதலையே வறுமையின் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்கியிருக்கிறார். 1953ம் ஆண்டு வெளியான "ஔவையார்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. 

ஆனால் அந்த ஒரு திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தட்டு தடுமாறி தன்னுடைய பட்டப்படிப்பையும் அவர் முடித்த பிறகு, எல்.ஐ.சி-யில் வேலை பார்த்து வந்த அவருக்கு, கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான "மாந்தோப்பு கிளியே" என்கின்ற திரைப்படத்தின் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1979ம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது. அன்று தொடங்கி கடந்த 2006ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான "தலைநகரம்" திரைப்படம் வரை சுமார் 1500 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.

Latest Videos


Omakuchi narasimhan

அவர் திரை உலகில் அறிமுகமாவதற்கு முன்பாக பெரிய அளவில் தன்னுடைய பட வாய்ப்புக்காக பலரை சந்தித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு, மறைந்த காமெடி கிங் சுருளி அவர்களும், மறைந்த இயக்குனர் விசு அவர்களும் தான் பெரிய அளவில் உதவி இருக்கின்றனர். சுருளி மற்றும் இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக சிறியதும் பெரியதுமாக பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார் அவர். 

14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஓமக்குச்சி நாராயணன் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான "இந்தியன் சம்மர்" என்கின்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றதும் குறிப்பிடத்தக்கது. எல்ஐசி ஏஜெண்டாக அவர் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் சில மேடை நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் தான் "ஓமக்குச்சி". அது அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriyan movie

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான "நாயக்" திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் ஓமக்குச்சி நாராயணன். தெலுங்கு மொழியிலும் கன்னட மொழியிலும் பெரிய அளவில் புகழ்பெற்ற இவர் தமிழில் மட்டும் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பெருமை கொண்டவர். தொண்டை புற்றுநோய் காரணமாக பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த நரசிம்மன், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி சென்னையில் தனது 73வது வயதில் காலமானார்.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தல-க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!

click me!